உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமையல் தோட்டம் திறப்பு

சமையல் தோட்டம் திறப்பு

புதுச்சேரி: உலக சுற்றுப்புற தினத்தை முன்னிட்டு, அக் ஷய பாத்ரா நிறுவனம் சார்பில், புதுச்சேரி வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சமையல் தோட்டம் உருவாக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது.சமையல் தோட்டத்தினை புதுச்சேரி கல்வி செயலாளர் ஆஷிஷ் மாதோ ராவ் மோரே துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஸ்ரீமதி, சிவகாமி, மதிய உணவு திட்டத்தின் துணை இயக்குனர் கொஞ்சு மொழி குமரன், துணை இயக்குநர் (மகளிர் கல்வி) சிவராம ரெட்டி, பள்ளி துணை முதல்வர் ஸ்ரீமதி, கவுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மேலாளர் அமித் ரஞ்சன், அரசு தொடர்பு அதிகாரி ஜூலியன், அக் ஷய பாத்ரா ஊழியர்கள் செய்திருந்தனர்.இந்த சமையல் தோட்டத்தில் நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை