உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சகோதரர் நிறுவனத்தில் ரூ.2.5 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

சகோதரர் நிறுவனத்தில் ரூ.2.5 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

புதுச்சேரி, : புதுச்சேரியில் சகோதரர் நிறுவனத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் தகவல்களை திருடி, ரூ.2.5 கோடி மோசடி செய்தவர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி, நீடராஜப்பர் வீதியை சேர்ந்தவர் ஆல்பிரெட் மனோஜ்குமார், 39. இவர், புதுச்சேரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு இவரது சகோதரர் டேனி ராஜேஷ், 36, துணை இயக்குநராக பணிபுரிந்தார். கடந்த ஏப்ரலில், டேனி ராஜேஷ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, புதுச்சேரி 45 அடி சாலையில், தனியாக புதிய நிறுவனத்தை துவங்கினார். சகோதரரின் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அந்த நிறுவன சொத்துகள், ஹார்டு டிஸ்க், லேப்டாப், சிம் கார்டு, வாட்ஸ் ஆப் தரவுகள், பண வவுச்சர்கள், பில், கணக்கு புத்தகத்தில் உள்ள தரவுகள் அனைத்தையும், திருடி தனது நிறுவனத்தில் பயன்படுத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, ஊழியர்களை டேனி ராஜேஷ் புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார். இதில் பழைய நிறுவனத்தின், தரவுகளை வைத்து, டேனி ராஜேஷ், ரூ.2.5 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆல்பிரெட் மனோஜ்குமார், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை