உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநள்ளாறு கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.காரைக்காலில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். பின் கவர்னர் தர்ப்பாரண்யேஸ்வரர். விநாயகர், முருகன்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்து, சனீஸ்வர பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றினார்.முன்னதாக கவர்னரை அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.துணை ஆட்சியர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை