உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காகித தாமரை பூக்களால் ஓட்டுச்சாவடி அலங்கரிப்பு :கம்யூ., கட்சி எதிர்ப்பால் அகற்றம்

காகித தாமரை பூக்களால் ஓட்டுச்சாவடி அலங்கரிப்பு :கம்யூ., கட்சி எதிர்ப்பால் அகற்றம்

பாகூர் : பாகூரில் ஓட்டு சாவடி 'காகித தாமரை பூக்களால்'அலங்கரிக்கப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் துறையினர் அவற்றை அப்புறப்படுத்தினர்.புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு இன்று நடக்கிறது. ஓட்டு சாவடிகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. வாக்காளர்களை வரவேற்கும் வகையில், ஓட்டு சாவடிகள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 11/23 என்ற எண் கொண்ட ஓட்டு சாவடி 'பிங்க் பூத்' என்ற பெயரில் பெண் அதிகாரிகளை கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டு சாவடியின் நுழைவு வாயில் மற்றும் உள்ளேயும் பிங்க் மற்றும் வெள்ளை நிறங்களில் காகிதத்தால் ஆன தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.தகவலறிந்த பாகூர் இந்திய கம்யூ., விஜயபாலன், மணிவண்ணன், மா.கம்யூ., சரவணன், முருகையன் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்று பா.ஜ.,வின் சின்னமான 'தாமரை பூ' வடிவத்தில் எப்படி ஓட்டுச் சாவடியை அலங்கரிக்கலாம். இது தேர்தல் விதியை மீறிய செயல் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பாகூர் வருவாய் துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காகித தாமரை பூக்களை அப்புறப்படுத்தி, அங்கிருந்த அறைக்குள் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி