உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் புதுச்சேரி மக்களை புறக்கணித்ததை கண்டித்து சட்டசபை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி, ரங்கப்பிள்ளை வீதி, மிஷன் வீதி சந்திப்பில் இருந்து, கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேற்று காலை 10:00 மணிக்கு, ஊர்வலமாக புறப்பட்டு சட்டசபை நோக்கி வந்தனர். இதைத் தொடர்ந்து, சட்டசபை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் இ.கம்யூ., சார்பில், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநிலத் துணைச் செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் முருகன், சீனிவாசன், மா.லெனினிஸ்ட் மாநில செயலாளர் புருேஷாத்தம்மன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ