உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தவளக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் பிரேமாநந்தம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் எத்திராஜ் வரவேற்றார்.தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஸ்மா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் தவளக்குப்பம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் பவுனம்பாள், சுகாதார உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், இளஞ்செழியன், கிராமப்புற செவிலியர் கலாவதி, ஆசிரியர்கள் ஜஸ்டின், முத்தாலு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ