உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீமிதி உற்சவ தேரோட்டம்

தீமிதி உற்சவ தேரோட்டம்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதியுலா நடந்து வருகிறது.இதற்கிடையே, தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. இதில் திரளான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, இன்று(25ம் தேதி) காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் மற்றும் இரண்டாவது நாளாக தேர் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ