உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு மாவட்ட பதிவாளர் அதிரடி உத்தரவு

கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு மாவட்ட பதிவாளர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் ஊழியர்கள், உறுப்பினர்கள் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்படுகின்றன. சங்க உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டி இந்த சங்கங்கள் வழியாக கடனுதவி, நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்கள், புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன.இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். இதனையடுத்து தற்போது 86 கூட்டுறவு சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கூட்டுறவு பதிவாளர் யஸ்வந்தையா பிறப்பித்தார்.இந்த பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, எரிசாராய ஆலை, காவலர், சுதேசி காட்டன் மில் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியுள்ளன. இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளன.புதுச்சேரியில் ஏற்கனவே கடந்த 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை 1256 சங்கங்களும், 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 1512 சங்கங்களும் கலைக்கப்பட்டுள்ளன. கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடியை இந்திய கம்பெனியின் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் எடுத்து இருந்தார்.தற்போது அந்த வரிசையில் கூட்டுறவு பதிவாளரும் இறங்கி, கூட்டுறவு சங்கங்களை அதிரடியாக கலைத்துள்ளார். இந்த கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றதா என்பதை அறிய பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுபட்டது. அதற்கு முறையான பதில் வரவில்லை. சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் சுவற்றில் அடித்த பந்துபோன்று திரும்பியும் வந்தன.இதனையடுத்து அதிரடியாக கூட்டுறவு துறை, 86 கூட்டுறவு சொசைட்டிகளை கலைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ