| ADDED : ஏப் 20, 2024 05:00 AM
தி.மு.க., பாணியில் பா.ம.க.,வினர் வெற்றி பெற்றால் பணம் உறுதியாக தருவோம் என டோக்கன் வினியோகம் செய்துள்ளனர்.ஆரணி லோக்சபா தொகுதியில் கடந்த 17ம் தேதி தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் டோக்கன் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் டோக்கனுக்கு கவனிப்பு இருக்கும் என கூறியுள்ளனர். இந்த டோக்கனுக்கு 200 ரூபாய் கொடுக்க உள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பிறகு ஆரணி தொகுதிக்குட்பட்ட செஞ்சி, மயிலம் சட்டசபை தொகுதியில் தங்களுக்கு சாதகமான சில கிராமங்களில் பா.ம.க., வினர் ஓட்டுக்கு தலா 100 ரூபாய் கொடுத்தனர்.சில இடங்களில் டோக்கன் கொடுத்தனர். வெற்றி பெற்றால் டோக்கனுக்கு கண்டிப்பாக பணம் தருவோம் எனக் கூறியுள்ளனர். சில இடங்களில் வாக்காளர்கள் டோக்கன் வாங்க மறுப்பு தெரிவித்ததால் நிர்வாகிகள் டோக்கன் வினியோகம் செய்யமல் தாங்களே வைத்து கொண்டனர்.இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க.,வை விட அ.தி.மு.க.,வை எதிர்ப்பதிலேயே பா.ம.க., அதிக கவனம் செலுத்தியது. பா.ம.க.,வை எதிர்த்து அ.தி.மு.க., போட்டியிடும் இடங்களில் தங்களின் ஓட்டு சதவீதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக திடீரென பண வினியோகம் செய்திருப்பதாக அரசியல் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.-நமது நிருபர்-