மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி: புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி சார்பில் நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நாடு முழுதும் கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி சார்பில் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிசளம் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது.தி.மு.க., வழக்கறிஞர் அணி தலைவர் கணேசன், துணை தலைவர் தாமோதரன், இண்டியா கூட்டணி கட்சி வழக்கறிஞர் மருதுபாண்டியன், கம்யூ., கட்சி கோவிந்தசாமி, மா.கம்யூ., சரவணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.பொதுகுழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், வேலவன், பிரபாகரன், செந்தில்குமார், அமுதா குமார், வடிவேல், சீனுமோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago