| ADDED : ஏப் 06, 2024 05:25 AM
புதுச்சேரி: மாநில அந்தஸ்தை தனக்கு தேவையான சமயங்களில் மட்டும் முதல்வர் கையில் எடுத்துக்கொள்கிறார் என, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டினார். அவர், கூறியதாவது:கடலுார் சாலை, சிங்காரவேலர் திடலில் நாளை காலை 9:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பலர் வெளியேறுவர். புதிதாக சிலர் இணைவர். இது காலம்காலமாக நடக்கிறது. அதற்காக அந்த கட்சிகள் அழிந்துவிடும் என்பதல்ல. அதுபோலத்தான் காங்., கட்சியிலிருந்து நமச்சிவாயம் வெளியேறி பா.ஜ.,வில் இணைந்தார்.இப்போது பா.ஜ.,வில் இருந்தும் பலர் வெளியேறி வருகின்றனர். நமச்சிவாயம் வெளியேறியதால் காங்., பலவீனமடைந்துவிடாது. ரங்கசாமி தான் கட்சி ஆரம்பித்த நோக்கமோ மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்றார். ஆனால் மாநில அந்தஸ்தை தனக்கு தேவையான சமயங்களில் மட்டும் அவர் கையில் எடுத்துக்கொள்கிறார். பிரசாரத்தில் ரேஷன்கடைகளை திறப்போம் என, வாக்குறுதி அளிக்கின்றனர். மூன்று ஆண்டுகளாக திறக்கவில்லை. இதற்கு மேல் எப்படி திறப்பார்கள். அரசு அமைந்த பின் புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை வேலைவாங்கும் திறமை அரசுக்கு உள்ளதா. அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகளின் வங்கியில் நேரடியாக பணம் செலுத்துவோம் என்றனர். அப்படியென்றால் ஏன் சைக்கிள், லேப்டாப் வழங்குகிறார்கள். அந்த பணத்தை கொடுத்தால் மாணவர்கள், பெற்றோர் நேரடியாக வாங்கி கொள்ள மாட்டார்களா.புதுச்சேரி மக்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். வெற்றி நிச்சயம்.இவ்வாறு அவர் கூறினார்.