மூதாட்டியின் கண்கள் தானம்
புதுச்சேரி : உப்பளம், தமிழ்தாய் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி சுசீலா, 75. இவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.அவரது குடும்பத்தினர், இறந்த சுசீலாவின் கண்களை தானமாக வழங்க முடிவு செய்து, ரெட் கிராஸ் சொசைட்டி ஆலோசகர் கந்த சாமியை தொடர்பு கொண்டனர். அவரது வழிகாட்டுதலின் படி, அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர் ஜான்சிராணி தலைமையிலான மருத்துவக்குழுவின் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து, கண்களை தானமாக பெற்றனர்.