உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டாக்டரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

டாக்டரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி, : தனியார் மருத்துவரிடம் ரூ. 2 லட்சம் ஏமாற்றிய மோசடி நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, நைனார்மண்டபத்தைச் சேர்ந்தவர் சூர்யகுமார், 31; மணக்குள விநாயகர் மருத்துவமனை மருத்துவர். இவருடைய மொபைல் போனுக்கு நேற்று அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் என, அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக ரூ. 2 கோடி வந்துள்ளதாக தெரிவித்தார். உங்கள் வங்கி கணக்கை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அச்சமடைந்த சூர்யகுமார், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 2 லட்சம் அனுப்பி ஏமாந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ