உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் அல்லாத படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு மூன்று படிப்புகளில் மாகி மாணவி முதலிடம்

நீட் அல்லாத படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு மூன்று படிப்புகளில் மாகி மாணவி முதலிடம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கான விண்ணப்ப பரிசீலனை அனைத்தும் முடித்தும் நேற்று வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

கலை, அறிவியல் படிப்புகள்

அதிக போட்டி ஏற்பட்டுள்ள கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு மொத்தம் 7,957 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வரைவு தரவரிசை பட்டியலில் ஓ.பி.சி., பிரிவு மாணவர் ஸ்ரீயா மதன்ராஜ் 99.500 மதிப்பெண்ணுடன் முதலிடம், மாணவர் நிகித் 98.667 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

உயிரியல் சார்ந்த படிப்புகள்

பி.வி.எஸ்.சி., பி.பி.டி., பி.எஸ்சி., பாராமெடிக்கல உள்ளிட்ட உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் மாகி பொது பிரிவை சேர்ந்த மாணவி ஆயிஷா சகானா ஒட்டு மொத்தமாக 100 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இயற்பியல், வேதியியல், உயிரியல் என, மூன்று பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். உயிரியல் சார்ந்த படிப்பிற்கு ஒட்டு மொத்தமாக புதுச்சேரி மாணவர்கள் 4,247 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 1,565 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இன்ஜினியரிங்

உயிரியல் சார்ந்த படிப்புகளில் முதலிடம் பிடித்த மாகி பொது பிரிவு மாணவி ஆயிஷா சகானா பி.டெக்., வரைவு தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார். புதுச்சேரி பிராந்தியம் மீனவர் பிரிவு மாணவர் சீனு 99 மதிப்பெண்ணுடன் இரண்டாம் பிடித்துள்ளார். பி.டெக்., படிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து 4,783 பேர், வெளிமாநில த்தினர் 1,024 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

பி.எஸ்சி., அக்ரி

பி.எஸ்சி., அக்ரி, தோட்டக்கலை படிப்பிற்கு புதுச்சேரியில் 1,911 மாணவர் களும், பிற மாநில மாணவர்கள் 868 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஏனாம் பிராந்தியம் நந்திகி ஜெசிகா 99.553 மதிப் பெண்ணுடன் தரவரிசை பட்டியலுடன் முதலிடம் பிடித்தார்.

பி.பார்ம்.,

பி.பார்ம் படிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து 3,694 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 1,265 பேரும் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். உயிரியல் சார்ந்த படிப்புகள், இன்ஜினியரிங் படிப்புகளில் முதலிடம் பிடித்த மாகி பொது பிரிவை சேர்ந்த மாணவி ஆயிஷா சகானா பி.பார்ம் படிப்பிற்கான வரைவு தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆட்சேபனை

இது தவிர சட்டம், பி.டெக்., புட் டெக்னாலஜி., டிப்ளமோ படிப்புகள், டி.ஏ.என்.எம்., படிப்புகளுக்கும் வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. ஜே.இ.இ., மதிப்பெண் அடிப்படையிலான பி.டெக்., படிப்பிற்கு பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தங்களுடைய டேஷ்போர்டு மூலம் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி