உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் சீரமைப்பு: எம்.எல்.ஏ., ஆய்வு

வாய்க்கால் சீரமைப்பு: எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் வாய்க்கால் சீரமைக்கும் பணியை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.உப்பளம் தொகுதி, தமிழ்த்தாய் நகரில், சீனுவாசப் படையாட்சி வீதி, மற்றும் குறுக்கு வீதிகளுக்கு வாய்க்கால் மற்றும் தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி பணிகளைதுவக்கி வைத்தார்.லோக்சபா தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால், அப்பணிகள் நடைபெறவில்லை.தற்போது மீண்டும் வாய்க்காசல் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் துவங்கிநடந்து வருகின்றன.இப்பணியை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். உதவிப் பொறியாளர் யுவராஜ், இளநிலைப்பொறியாளர்கள் சண்முகம், பரமானந்தம், மற்றும் தொகுதி செயலாளர் சக்திவேல், காங்., செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தொ.மு.ச. துணை அமைப்பாளர் மிஷேல், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை