உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் பிரச்னை எம்.எல்.ஏ., ஆய்வு

குடிநீர் பிரச்னை எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி, : உப்பளம் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க பொதுப்பணித்துறை மூலம் நடக்கும் பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.உப்பளம் தொகுதி நேத்தாஜி நகர், அவ்வைத் தோட்டம் பகுதியில், குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. குடிநீர் பிரச்னையை சரி செய்ய, அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்னை குறித்து, எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டார்.இந்நிலையில், அப்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் மாற்றி சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை ஊழியிர்கள் மேற்கொண்டனர். அங்கு நடந்த பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார ஒயர்களை மின்துறையினரிடம் தெரிவித்து சீர் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், காங்., செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், இருதயராஜ், ரகுமான், மோரிஸ், அகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ