புதுச்சேரி : சாணாரபேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட 3 இடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 27, 28, 29ம் தேதி ஆகிய 3 நாட்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.தனகோடி நகர், சாணாரபேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், வரும் 27ம் தேதி காலை, 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, தனகோடி நகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணாரபேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.தனபாலன் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணியால், வரும் 28ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, காத்திருந்த நல்லுார், தனபாலன் நகர், கல்கி நகர், சேரன் நகர், அகத்தியர் தோட்டம், அருணா நகர், கணபதி நகர், என்.ஆர். ராஜிவ் நகர், வள்ளலார் நகர் பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.பூத்துறை சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், வரும் 29ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.