உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரைவருக்கு கத்தி குத்து: 3 பேருக்கு போலீஸ் வலை

டிரைவருக்கு கத்தி குத்து: 3 பேருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரி, ஆலங்குப்பம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து, 42; டிரைவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் குயிலாப்பாளையத்தில் பெத்தரன், அவரது மனைவி வாசுகி நடத்தி வந்த விடுதியில் பணிபுரிந்தார்.அங்கு தங்கி இருந்த சிறுவன் பிரபாகரன் என்பவரை விடுதியில் சேர்த்து விடுமாறு முத்துவிடம் கடந்த 2020ம் ஆண்டு வாசுகி கூறினார். இதையடுத்து பிரபாகரன் ஆனாதை என கூறி ஆரோவில் போலீசில் முத்து ஒப்படைத்தார்.இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின், கடந்த 5ம் தேதி பிராபகரன் எங்கே என்று முத்து வீட்டிற்கு சென்று வாசுகி, பெத்தரன் கேட்டனர். அதற்கு முத்து அப்போதே ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார்.இதற்கிடையே அவர்களுடன் வந்த நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துவை குத்திவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த முத்துவை உறவினர்கள் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர். அவரது புகாரின் பேரில் பெத்தரன் உட்பட மூவர் மீது கோரிமேடு போலீசர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ