உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கனுார்: லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். காட்டேரிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.போக்சோ சட்டம் மற்றும் புதிதாக அமலுக்கு வந்து சட்டப் பிரிவுகள் குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shreya
ஜூலை 06, 2024 22:26

இவங்களே விப்பாங்களாம். இவங்களே விக்கறவங்களை கைது பண்ண மட்டங்களாம். ஆனா விழிப்புணர்வு நாடகம் போடுவார்களாம். நல்ல காமெடி.


முக்கிய வீடியோ