உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில், புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில் போதை பொருட்களின் பழகத்தை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில், புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், சப் இன்ஸ்பெக்டர் ஜாகின் உசேன் கலந்து கொண்டு பேசுகையில்'' சிறுவர்கள், மாணவர்களை குறிவைத்தே போதை பொருள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.போதை பொருட்களின் பழக்கத்திற்கு ஆளாகினால், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். மாணவ - மாணவிகள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும். மாறாக சமூக வலை தளங்களின் பக்கம் கவனம் செலுத்தினால் இலக்கை அடைய முடியாது என்றார்.'' மேலும், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், போக்சோ மற்றும் கல்வி மேம்பாட்டு திறன், புதியதாக அமலுக்கு வந்துள்ள சட்ட பிரிவுகள் குறித்து பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை