| ADDED : ஜூன் 06, 2024 02:23 AM
பாகூர்: இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட கோரி, துப்புறவு தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பாகூரில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியில் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் சுப்புறவு தொழிலாளர்கள் தங்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், இ.எஸ்.ஐ., பி.எப்., போன்றவை சலுகைககளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 நாட்ளாக பணிகளை புறக்கணித்தனர்.நேற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சாலையோரமாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தும் பணி தடைபட்டது. இதனால் கிராமப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் உருவானது.தனியார் நிறுவன அதிகாரிகள் தொழிலாளர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்கு திருப்பி, பிற்பகல் முதல் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். துப்புரவு தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.