மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது; என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு 3 ஆண்டு முடிந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 3 ஆண்டில் மக்களின் பிரதான அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாமல், மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாதது, மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிந்து மாநில உரிமைகளை பெறாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மின்துறை தனியார் மயமாக்கப்படாது என உறுதி அளிக்கவில்லை. மூடப்பட்ட மில்களை திறக்கவில்லை. ஊழல் முறைகேடு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா போதை பொருள் விற்பனையை தடுக்கவில்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் அந்த பகுதி மக்கள் நலனுக்காக இ-பாஸ் வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் 4000 கார்கள் வரவேண்டிய இடத்தில், 20 ஆயிரம் கார்கள் வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுலா என்ற பெயரில் வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் கஞ்சா கடத்தி வர ஏதுவாக புதுச்சேரி உள்ளது. பல மாநிலத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் புதுச்சேரியில் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் வருகையை ஆராய உடனடியாக இ-பாஸ் முறையை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago