| ADDED : ஜூன் 16, 2024 06:04 AM
புதுச்சேரி: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதியோர் வன் கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் புதுச்சேரி முதியோர் நல இயக்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். தனலட்சுமி வரவேற்றார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சமூகநலத்துறை செயலர் முத்தம்மா, நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.முதியோர் நல இயக்க தலைவர் எட்வின்பாபு, இயக்குனர் வேணுகோபால், ராமலிங்கம், டாக்டர் சத்தியபாபு ஆகியோர் கருத்துரை வழங்கினர். சத்தியபாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ராமதாஸ், சாதாசிவம் ஆகியோர் முதியோர்களின் செயல்பாடுகள் குறித்து பேசினர். விழாவில் முதியோர் களுக்கு நாட்டுப்புறப்பாட்டு, நடனம், கும்மிப் பாட்டு, மாறுவேடப்போட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹெல்ப் ஏஜ் இந்தியா இயக்குனர் தயாநிதி நன்றி கூறினார்.