உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

புதுச்சேரி: வலிப்பு நோயால் அவதிப்பட்ட முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரியகாலப்பட்டு இ.சி.ஆர்.மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கன்னியப்பன் 65, கூலித் தொழிலாளி. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை