உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம்

தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம்

புதுச்சேரி: கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை மூலம் தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தேசிய கால்நடை பணிக்குழுமத்தின் தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம், மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்த புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையை செயல்படுத்தும் முகமையாக நியமனம் செய்துள்ளது.திட்டத்தின் நோக்கமானது 50 சதவீத மானியத்தில் கிராமப்புற கோழி வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன உற்பத்தி ஆகியவற்றிற்கான தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.அதன்படி, செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு: 100 பெட்டை ஆடு, 5 கிடா ஆடு திட்ட மதிப்பீடு ரூ.20 லட்சம், மானியம் ரூ.10 லட்சம் வழங்கப்படும். பன்றி வளர்ப்பு:50 பெண் பன்றிகள், 5 ஆண் பன்றிகள் திட்ட மதிப்பீடு ரூ.30 லட்சம், மானியம் ரூ. 15 லட்சம், புறக்கடை கோழி வளர்ப்பு. குறைந்த பட்சம் 1000 எண்ணிக்கையிலான நாட்டின தாய் கோழி பண்ணை, குஞ்சு பொரிப்பகம் மற்றும் தாய் அலகு ஆகியவற்றை நிறுவுதல், திட்ட மதிப்பீடு ரூ.50 லட்சம், மானியம் ரூ. 25 லட்சம்.தீவனம் மற்றும் தீவன பயிர் உற்பத்திக்கான கட்டமைப்பு: தீவன தொகுப்பு, உலர்ந்த புல் உற்பத்தி, ஊறுகாய் புல், நவீன தீவன விதை சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள் போன்ற பணிகளுக்கு திட்ட மதிப்பீடுரூ.1கோடி , மானியம் ரூ.50 லட்சம் ஆகும்.இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள், www.nlm.udyamimitra.inஎன்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியானது கடந்த 18 ம் தேதி முதல் 45 நாட்கள் ஆகும். மேலும், விவரங்களுக்கு துறை இணையதளம் https://ahd.py.gov.inஉள்ளிடவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ