உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடந்தது.புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு, ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வாழ்த்துரை வழங்கினார். துறை செயலர் ஜெயந்த்குமார் ரே கருத்தரங்கை துவக்கி வைத்தார்.இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி வரவேற்றார். மூத்த அறிவியல் அதிகாரி சகாய அல்பிரெட் நன்றி கூறினார். கருத்தரங்கில் முதல் அமர்வில், புதுச்சேரியில் நிலம் சீரழிவு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் குழு விவாதம், காரைக்கால் பஜன்கோ கல்லுாரி கல்வி தலைவர் பூச்சியப்பராஜூ தலைமையில் நடந்தது. புதுச்சேரி வேளாண்மை துறை தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் சிவராமன், நிலையான விவசாய நடைமுறைகள் என்ற தலைப்பிலும், உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ், நில சீரழிவை நிவர்த்தி செய்ய நிலையான கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் உரையாற்றினர். இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவர் சண்முகானந்தம், பாண்டிகேன் இணை நிறுவனர் ஆரோபிலியோ ஷியாவினா, அரபிந்தோ சொசைட்டி ஆராய்ச்சியாளர் ஜெயந்த கங்குலி, ஆரண்ய வனம் சரணாலயம் சரவணன் ஆகியோர் பேசினர்.இரண்டாவது அமர்வில், எல்லோருக்கும் துாய்மையான காற்று என்ற தலைப்பில், மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், புதுச்சேரியில் காற்றின் தர நிலை சவால்கள் மற்றும் மேம்படுத்தும் உத்திகள் என்ற தலைப்பில் பேசினார். புதுச்சேரியில் வாகன மாசு உலக வெப்ப மயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில், சென்னை விஞ்ஞானி சிவக்குமாரும், 2ம் நிலை எக்கு தொழிற்சாலைகளில் காற்று மாசை கட்டுப்படுத்தும் பசுமை உற்பத்தி நுட்பங்கள் என்ற தலைப்பில் சென்னை தேசிய உற்பத்தி கவுன்சில் துணை இயக்குனர் இதயச்சந்தர், டீசல் ஜெனரேட்டர்களுக்கு மாசு கட்டுப்பாடு சாதனங்களை சீரமைத்தல் தொழில்நுட்ப அதிகாரி ெஜகநாதன் பேசினர். மூன்றாவது தொழில்நுட்ப அமர்வில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் வட்டப் பொருளாதாரம் என்ற தலைப்பில் அய்யப்பன் ஜானகிராமன் பேசினார். இறுதியில் சுற்றுச்சூழல் துறை பொறியாளர் காளமேகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை