உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி பணி போட்டி தேர்வு நாளை நடக்கிறது

இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி பணி போட்டி தேர்வு நாளை நடக்கிறது

புதுச்சேரி: நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் செய்திக்குறிப்பு:மத்திய பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நேர்முக உதவியாளர் பதவி மற்றும் இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி பதவிக்கான போட்டி தேர்வினை, நாளை 7ம் தேதி நடக்கிறது. புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நேர்முக உதவியாளர் தேர்வு காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் மட்டும் நடக்கிறது.இதேபோல் இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி தேர்வு மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை நடக்கிறது. செவிலியர் தேர்வு, வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் இன்ஜினிரியங் கல்லுாரி, காந்தி வீதி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி, உப்பளம் இமாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரி உள்ளிட்ட எட்டு மையங்களில் நடக்கிறது. காலையில் நடக்கும் நேர்முக உதவியாளர் தேர்வினை 315 பேரும், மதியம் நடக்கும் செவிலியர் அதிகாரி தேர்வினை 3,305 பேரும் எழுத உள்ளனர். தேர்வு துவங்குவதற்கு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக அதாவது காலை 9 மணிக்கும் மற்றும் மதியம் 1.30 மணிக்கும் தேர்வு மையத்தின் நுழைவு வாயில்கள் மூடப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ் வசதி

புதுச்சேரி அரசு தேர்வர்களின் வசதிக்காக அன்று காலை 7:00 மணி முதல் 8 மணி வரையில், மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகும் மதியம் 11:30 மணி, மாலை 4:00 மணியளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை