உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடும்ப தகராறை தடுக்க முயன்ற மாஜி பாப்ஸ்கோ ஊழியர் கொலை; மதுரை வாலிபர்கள் இருவர் கைது

குடும்ப தகராறை தடுக்க முயன்ற மாஜி பாப்ஸ்கோ ஊழியர் கொலை; மதுரை வாலிபர்கள் இருவர் கைது

புதுச்சேரி : புதுச்சேரி திலாஸ்பேட்டை, அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி,56; முன்னாள் பாப்ஸ்கோ ஊழியர். மனைவியை இழந்த இவர், தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, மதுரை மாவட்டம், கீரத்துறை தாயுமானசாமி நகரைச் சேர்ந்த வேலு மகன் அமாவாசை (எ) தினேஷ்குமார்,22; முகமதுபைசல்,23: ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி, வழுதாவூர் சாலையில் உள்ள சிக்கன் ப்ரை ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.குடிப்பழக்கமுடைய தினேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு மனைவி புவனேஸ்வரியிடம் தகராறு செய்து தாக்கினார். வலி தாங்க முடியாத புவனேஸ்வரி வீட்டில் இருந்து கதறியபடி ரோட்டில் ஓடினார். அவரை தினேஷ்குமார் விரட்டிச் சென்றார். அதனை தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்த ரவி, மனைவியை ஏன் அடிக்கிறாய் எனக் கேட்டார். ஆத்திரமடைந்த தினேஷ்குமார், அவரது நண்பர் முகமது பைசலும் சேர்ந்து, ரவியை உருட்டு கட்டையால் தாக்கினர். அதனை, அவ்வழியே பைக்கில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ராமதீர்த்தம்,34; சூர்யா,25; ஆகியோர் தடுக்க முயன்றனர்.அவர்களையும், தினேஷ்குமார், முகமது பைசல் இருவரும் உருட்டு கட்டையால் தாக்கினர். சூர்யா தப்பிச் சென்றார். தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த ராமதீர்த்தம் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிந்து தினேஷ்குமார், முகமது பைசல் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ