உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த அரசு பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூர் அமிர்தா நகரை சேர்ந்தவர் குட்டியாண்டி - மதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆதேஷ் 17; அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.ஆதேஷ் விடுமுறைக்காக கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அவரது உறவினரான பூமொழி என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில், ஆதேஷ் அதில் தோல்வி அடைந்தார். இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் துண்டால் துாக்கு போட்டு கொண்டார்.உடன் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh
மே 12, 2024 08:17

+2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர்கள் தற்க்கொலை செய்து கொள்வது என்பது அவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சரியான அறிவுரைகளை தந்து ஊக்குவிக்க தவறியதே முக்கிய காரணம் மேலும் ஒன்றாவது வகுப்பிலிருந்து ஒன்பது வரை தேர்வு என்பது ஒரு சடங்கு என்கிற நிலையில் தேர்வில் வென்றால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் என்கிற யதார்த்த நிலையினை எதிர் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் திராவிட கட்சிகள் நீட் விலக்கு பெறுவதற்கு முன் தமிழ்நாட்டில் எந்த பள்ளிவகுப்பிற்க்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி முறையை கொண்டு வரவேண்டும் அதற்க்கு அடுத்த கட்டமாக பட்ட படிப்பிற்க்கும் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி