| ADDED : ஏப் 18, 2024 11:42 PM
புதுச்சேரி : அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என தேர்தல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில், கடந்த 1963 ஆண்டில் நடந்த, முதல் லோக்சபா தேர்தலின்போது, 75.18 சதவீத ஓட்டுகள் பதிவானது. மொத்தம் வாக்காளர்கள் 2,05,084 பேரில், 1,54,178 பேர், ஓட்டுப் போட்டனர். கடைசியாக நடந்த 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 81.19 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. கடந்த 1974ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 85.32 சதவீதம் பதிவானது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 82.09 சதவீதம், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 81.19 சதவீதம் பதிவானது. தற்போது புதுச்சேரி லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். சமூக வளைதளங்கள் மூலமாகவும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.அனைத்து வாக்காளர்களின் மொபைல் எண்களுக்கு தேர்தல் துறை குறுஞ்செய்தி அனுப்பி இறுதிகட்ட ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டது. இதனால் இந்த லோக்சபா தேர்தலில் கடந்த 1974ல் பதிவான 85.32 சதவீதத்தை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.