உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் சுமையால் மீனவர் தற்கொலை

கடன் சுமையால் மீனவர் தற்கொலை

காரைக்கால் : காரைக்காலில் கடன் சுமையால் மீனவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.காரைக்கால், கோட்டுச்சேரி, கீழகாசாகுடி, சுனாமி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 36; மீனவர். இவரது மனைவி மதியரசி; இரு பிள்ளைகள் உள்ளனர்.ஜெயக்குமாருக்கு அதிக கடன் உள்ளதால் கணவன், மனைவி இடையோ தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கோபித்துகொண்டு வெளியே சென்ற ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் ஜெயக்குமார் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை