உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் சிகிச்சை பெற்ற ஐந்து பேர் டிஸ்சார்ஜ்

ஜிப்மரில் சிகிச்சை பெற்ற ஐந்து பேர் டிஸ்சார்ஜ்

புதுச்சேரி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பெரியசாமி, மகேஷ், கண்ணன், முருகன், பரமசிவம், சிவராமன், ராமநாதன், பாலு, சின்னசாமி, திருமாவளவன், மோகன், மாயக்கண்ணன், ஏசுதாஸ் உள்ளிட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்றனர்.சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி சத்யா, 27; பரமசிவம், 56; முருகன், 55; சின்னசாமி, 57; சாரதா, 45; ஆகிய 5 பேரும் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்ற 12 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை