| ADDED : ஏப் 03, 2024 07:13 AM
பாகூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில், கல்வி துறை துணை இயக்குனர் தலைமையிலான, பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த 26ம் தேதி துவங்கியது. புதுச்சேரியில் 37 தேர்வு மையங்களும், காரைக்காலில் 12 என, மொத்தம் 49 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், முறைகேடுகளை தடுக்க வேண்டி, கல்வித்துறை மூலமாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்ற நிலையில், புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) சிவராமரெட்டி தலைமையில் 5 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி, கஸ்துாரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.