மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
10 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
10 hour(s) ago
கடலுார் : கள்ளச்சாராய சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ., மற்றும் பழனிசாமி ஆட்சி காலங்களில் போலீஸ் துறைக்கு அவர்கள் எந்த அழுத்தமும் தரவில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் போலீஸ் துறையை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.குற்றவாளிகளை தண்டிப்பதில்லை. 2 எம்.எல்.ஏ.,க்களாலேயே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு 62 பேர் இறந்துள்ளனர். பலர் கண், மூளை பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தினால் மீண்டும் போலீசாருக்கு அழுத்தம் வரும். சி.பி.ஐ., விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
10 hour(s) ago
10 hour(s) ago