உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் நாய்கள் கடித்து செவிலிய மாணவிகள் உட்பட 4 பேர் காயம்

அரசு மருத்துவமனையில் நாய்கள் கடித்து செவிலிய மாணவிகள் உட்பட 4 பேர் காயம்

காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் சுற்றித் திரிந்த நாய்கள் கடித்து ஊழியர் மற்றும் செவிலிய மாணவிகள் இருவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காரைக்கால் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூராக நாய்கள்,மாடுகள், குதிரைகள் அதிகளவு சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவிகள் இருவரை மருத்துவமனையில் திரிந்த நாய்கள் கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே மருத்துவமனையைச் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை