மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
5 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
5 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
5 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
5 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.திண்டுக்கல், கொத்தனார் முதல் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர், 60; நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி, 55; மகன் சுதர்சன், 25; மகள் சவுந்தர்யா, 23; ஆகியோருடன் கடந்த, 7ம் தேதி இரவு, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர், முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 'பீனிக்ஸ் ரெசிடென்சி'யில் அறை எடுத்து தங்கினார்.இவர்களது அறை நேற்று முன்தினம் வரை திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பெரியக்கடை போலீசார் முன்னிலையில், கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே 4 பேரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து இதுகுறித்து பெரியக்கடை போலீசா வழக்கு பதிந்து, திண்டுக்கலில் இருந்து சந்திரசேகரின் உறவினர்களை வரவழைத்து விசாரித்தனர். அதில், சந்திரசேகரிடம் சிலர் நகையை உருக்கி தரச் சொல்லி கொடுத்தனர். அதில் சில திருட்டு நகை இருந்துள்ளது. அதனை தமிழக போலீசார் மீட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நகையை கொடுத்தவர்கள் மீதி நகையை கேட்டு டார்ச்சர் செய்ததால், அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஒரே இடத்தில் தகனம்
உடற்கூறாய்வில், நால்வரும் ஒரே வகை விஷத்தை குடித்திருக்கலாம் என்பதும், உடல் பாகங்களின் ஆய்வுக்கு பிறகே அது எந்த வகை விஷம் என தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டது.பிரேத பரிசோதனைக்கு பிறகு நால்வரின் உடல்களும், திப்ராயப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago