உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஷேர் மார்க்கெட்டில் அதிக வருவாய் என ஆசை வார்த்தை கூறி ரூ.22 லட்சம் மோசடி

ஷேர் மார்க்கெட்டில் அதிக வருவாய் என ஆசை வார்த்தை கூறி ரூ.22 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரி, வில்லியனுார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு ஆண்டுகளா 'கிரவ்' என்ற ஆப் மூலம் ஷேர் மார்க்கெட் வர்த்தகம் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் சமூக வலைதளத்தில் ஷேர் மார்க்கெட் வர்த்தகம் தொடர்பாக வந்த லிங்கை கிளிக் செய்த போது, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்துள்ளார்.பின்பு, அந்த குழுவில் வர்த்தகம் எப்படி செய்வது என்று கூறியுள்ளனர், மேலும் அவர்கள் தாங்கள் உருவாக்கிய ஆப் மூலம் ஷேர் மார்க்கெட் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.அதை நம்பி அவர்கள் கூறிய 'யூடள்யுஎம்ஐஎன்' என்ற ஆஃப்பில் ரூ. 22 லட்சத்து 45 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீடு செய்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் நாள் ஒன்றுக்கு ஐந்து சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகமாக நாள் ஒன்றுக்கு 10 சதவீதம் லாபம் வருமாறு மோசடிக்காரர்கள் செட் செய்து வைத்திருந்தனர். பின்னர், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது, பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று ரூ. 3 கோடியே 45 லட்சம் வரை 5 நபர்களை ஏமாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இதுபோன்று உண்மை தன்மையை அறியாமல் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் எந்த ஒரு ஷேர் மார்க்கெட் வர்த்தக ஆப்களையும் முதலீடு செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் பொதுமக்களுக்கு தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை