உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் நபரிடம் ரூ.3.95 லட்சம் மோசடி

காரைக்கால் நபரிடம் ரூ.3.95 லட்சம் மோசடி

புதுச்சேரி: பங்கு சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, காரைக்கால் நபரிடம் ரூ. 3.95 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.காரைக்காலை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரிடம், பங்கு சந்தை செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பியே செந்தில்முருகன், ரூ. 3.95 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல், அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தார். அதே போல, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை, மார்பிங் செய்த புகைப்படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ