உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பேரிடம் ரூ.2.81 லட்சம் மோசடி

2 பேரிடம் ரூ.2.81 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேரிடம் 2.81 லட்சம் மோசடி செய்த குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.அதனை தொடர்ந்து, மர்ம நபர் கொடுத்த ஆன்லைன் வேலையை செய்து முடித்தார். ஆனால் அதற்கான லாப தொகையை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாஹீன்அலி. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பணம் சம்பதிக்கலாம் என கூறியதை நம்பிய அவர் 81 ஆயிரம் பணத்தை அனுப்பினார். பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.இதுகுறித்து, 2 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ