மேலும் செய்திகள்
ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது
06-Aug-2024
காரைக்கால்: காரைக்கால், நிரவி முகமது நகரை சேர்ந்த ஹூசைன் பேக்; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஹூசைன் பேக் கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு செல்வதற்காக விசா பெற வேண்டி, காரைக்கால் மூன்று கிணற்று பிளாசா தெற்கு வீதியில் வசிக்கும் சகரா டிராவல்ஸ் உரிமையாளர் நைனா முகமது, 45, என்பவரை அனுகினார். அவர், விசா வாங்கி தருவதாக கூறி 2.20 லட்சம் ரூபாய் கேட்டார். அதை நம்பி ஹூசைன் பேக் ரூ.1.25 லட்சம் கொடுத்தார்.ஆனால் விசா பெற்று தரவில்லை. பணத்தை திரும்ப கோட்டபோது நைனா முகமது ரூ.43ஆயிரம் பணம் மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. இது குறித்து ஹூசைன் பேக் மனைவி அசினா பேகம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நைனா முகமதுவை கைது செய்தனர்.
06-Aug-2024