உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ்

இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ்

புதுச்சேரி: இடையார்பாளையத்தில் நடந்த இலவச தையல் வகுப்பில், பயிற்சி பெற்ற பெண்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி, குளூனி சமூக சேவை தொண்டு நிறுவனம் மற்றும் இத்தாலிய எபிகாஸ்பல் கான்பரன்ஸ் சார்பில், இடையார்பாளையத்தில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கின. இந்த பயிற்சி வகுப்புகள் மொத்தம், 4 மாதங்கள் வரை நடந்தன.இதில், 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். இந்த நிலையில், நிர்வாகி லிஸ்சி, மற்ற அருட்சகோதரிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இது குறித்து பயிற்சி பெற்ற பெண்கள் கூறுகையில், ''இந்த தையல் பயிற்சி வாழ்வாதாரம் உயர மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனால், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு பயிற்சி அளித்த அனைவருக்கும் நன்றி,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை