உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்வித்தை பயிற்சி மாணவர்களுக்கு பரிசு

வில்வித்தை பயிற்சி மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி : வில்வித்தை பயிற்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அரியாங்குப்பம் வில்வித்தை பயிற்சி கழகம் சார்பில், கோடை கால வில்வித்தை பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி, கடந்த 9ம் தேதி வரை நடந்தது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு, காங்., மாநில பொதுச் செயலாளர் சங்கர், அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் அய்யப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில், முருகன், செல்வ மணிகண்டன், வில்வித்தை கவுரவ தலைவர் எழிலரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை