உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.புதுச்சேரியில் தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 416 அரசு பள்ளிகள் உள்ளன. தமிழக பாடத் திட்டத்தை பின் பற்றிய இப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி அரசு பள்ளிகளில் தினசரி பாட வேளை 7ல் இருந்து 8 ஆக உயர்த்தியதுடன், பள்ளிகள் துவங்கும் நேரத்தையும் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. அதன்படி, காலை 9:30 மணிக்கு பதிலாக காலை 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கி, மாலை 4:20 மணிக்கு பள்ளி முடியும். தினசரி 7 ஆக இருந்த பாடவேளை தற்போது 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காலை 10.45 முதல் 10.55 வரையிலும், மாலையில் 2.50 முதல் 3:00 மணி வரை இரு இடைவெளிகள் விடப்படும். மதியம் 12.25 முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவெளி.காலையில் நடக்கும் 4 பாட வேளைகள் தலா 45 நிமிடங்களும், மதியத்திற்கு பிறகு நடக்கும் பாட வேளை தலா 40 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, பள்ளி கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sethu
ஜூலை 10, 2024 18:54

வரவேற்கிறோம் பாண்டிச்சேரி மக்களுக்கு நன்மையாகப்போகும் .தமிழகமக்கள் இனிமேல் பாண்டிச்சேரி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள் நல் வாழ்த்துக்கள் .


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை