உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி உயர்ந்த நிலைக்கு செல்ல 6 விஷயங்களை அரசு செய்ய வேண்டும்: பட்டியலிடுகிறார் செந்தில்குமார் எம்.எல்.ஏ.,

புதுச்சேரி உயர்ந்த நிலைக்கு செல்ல 6 விஷயங்களை அரசு செய்ய வேண்டும்: பட்டியலிடுகிறார் செந்தில்குமார் எம்.எல்.ஏ.,

புதுச்சேரி: கவர்னர் உரை மீதான விவாதத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது: புதுச்சேரி மாநிலம் உயர்ந்த நிலைக்கு செல்லவும், புதுச்சேரி மக்கள் உயர்ந்த நிலையில் வாழவும் ஏலாதி சூரணத்தைப் போல 6 பணிகளை அரசு செய்ய வேண்டும். அதன்படி, ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும், இளையோர் நலன்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், குடிநீர், பொது சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை, மாநில உரிமைகள் மீட்பு ஆகிய 6 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால தொலைநோக்கு பார்வை கொண்ட அரசாக புதுச்சேரி அரசு தனது சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.நீட் தேர்வு, கல்விக் கொள்கை மற்றும் மொழி திணிப்பு, மாநில அதிகாரங்களில் குறுக்கீடு மற்றும் விருப்பு, வெறுப்புகளால் ஆன நிதி பகிர்வை நிறுத்த வேண்டும். உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் மற்ற வளர்ந்த மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் புதுச்சேரி 10 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. பாகூர் பகுதியை சேர்ந்த பல சாலைகள் 15 ஆண்டுக்கு பிறகு போடப்பட்டுள்ளன. இதற்காக பாகூர் பகுதி மக்கள் சார்பாக என் நன்றி. விவசாய நிலங்களில் உயர்வட மின் கம்பங்களுக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறையின் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர்; எதுவும் ஓடவில்லை. தற்போதைய சூழ்நிலையில் புதுச்சேரிக்கு சுத்தமான குடிநீர் கிடைத்தால் போதும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, செந்தில்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்