உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் ரங்கசாமி வாழ்த்து 

முதல்வர் ரங்கசாமி வாழ்த்து 

புதுச்சேரி, : செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்க்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கனடாவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை 17 வயதில்படைத்துள்ளார். இளம் வயதில் இவர் நிகழ்த்தியுள்ள சாதனை, இந்தியர்களை குறிப்பாக தமிழ்மக்களை பெருமை கொள்ளச் செய்துள்ளது.கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங்லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை