| ADDED : மே 02, 2024 12:30 AM
புதுச்சேரி, : மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் குரு பெயர்ச்சியொட்டி, மகா யாகம் மற்றும் லட்ச்சார்ச்சனை நடந்தது.குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5:19 மணிக்கு, பெயர்ச்சியடைந்தார். புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் நவகிரக கோவில் உள்ளது. இங்கு, உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர குரு பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், குரு பெயர்ச்சி முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடந்தது. மாலை 5:19 மணிக்கு, குரு சாந்தி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம் நடந்தது. மாலை 5:26 மணிக்கு கலச அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து குரு பகவானுக்கு 1,008 லிட்டர் பால் அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம குருக்கள், கீதாசங்கர குருக்கள் செய்திருந்தனர்.