உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணவெளி தொகுதியில் நுாறு நாள் வேலை திட்டம்

மணவெளி தொகுதியில் நுாறு நாள் வேலை திட்டம்

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி ஆண்டியார்பாளையத்தில் பெட்ரோல் பங்க் முதல் உப்பனாறு வரை உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை 6.23 லட்சம் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தும் பணியைசபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம் ஈ.சி.ஆர்., முதல் பள்ளி வாசல் வரை உள்ள வாய்க்காலை 5.37 லட்சம் மற்றும் டி.என்.,பாளையம் ஏரி வரை உள்ள மலட்டாறு வாய்க்காலை 10.92 லட்சத்தில் துார்வாரும் பணிதுவக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன், பா.ஜ., பிரமுகர் ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, சுகுமாரன் என். ஆர்., காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகரன் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சக்திவேல், சிவக்குமார், சகாயராஜ், குப்புசாமி, டி. என்., பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சுகாதியா கிரிதரன் முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம், தர்மன், கிருஷ்ணராஜ், மாயகிருஷ்ணன், ஜெயமூர்த்தி, குமாரசெல்வம் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை