உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராய பாக்கெட், பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் கலால் வருமானத்தை ரூ. 1,600 கோடியாக உயர்த்த திட்டம் முதல்வர் ரங்கசாமி தகவல்

சாராய பாக்கெட், பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் கலால் வருமானத்தை ரூ. 1,600 கோடியாக உயர்த்த திட்டம் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கேள்வி நேரத்தின்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.; பேசியதாவது;காலாப்பட்டு தொகுதியில் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளுக்கு மத்தியில் மதுபான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அகற்றப்படுமா.முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரியில் மதுபான கடைகள் அமைப்பதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் கலால் சட்ட விதிகள் 1970படி அனுமதி வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிட்டுள்ளபடி மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து கணக்கிடப்படும் துார அளவுகோலின்படி மதுபான கடைகள் அமைத்தல், இடமாற்றம் செய்யப்படுகிறது.காலாப்பட்டு தொகுதியில் மதுபான கடைகள் நடைமுறையில் உள்ள கலால் சட்டம், விதிகளின்படி செயல்படுவதால் அவற்றை அகற்றும் சூழ்நிலை அரசுக்கு ஏற்படவில்லை.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,: ஆலங்குப்பத்தில் உள்ள மதுபான கடை கோவில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் உள்ளது. கோவிலின் மதில் சுவரில் கடை வருகிறது.முதல்வர் ரங்கசாமி: சுற்றுலா பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடைகளுக்கு அனுமதி விதிமுறையின் கீழ் வராது. விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் புதுச்சேரியில் மதுபான பார் அமைக்க முடியாது. மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளீர்களா?புதுச்சேரியில் இயங்கி வரும் 545 மதுபான கடைகளின் உரிமம் சில தனியாரிடம் மட்டுமே உள்ளது. நமது மாநிலம் கலால்துறை வருவாயை நம்பித்தான் உள்ளது. கடந்த ஆண்டு ரூ. 1485 கோடி வருவாய் கலால் துறை மூலம் கிடைத்துள்ளது. தற்போது இந்த வருவாயை ரூ. 1600 கோடியாக உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம்.சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பி.ஆர்.சிவா: சாராயம் குடித்து உள்ளூர் மக்கள் இறக்கின்றனர். இளம் விதவைகள் அதிக அளவில் உள்ளனர். நீங்கள் அளிக்கும் ரூ. 2000 உதவி தொகை வைத்து வாழ முடியுமா.முதல்வர் ரங்கசாமி: சாராயக்கடைகளை மூடி விடலாமா. சாராய கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும். அனைத்தும் விஷயங்களையும் ஆராய்ந்து தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். சபாநாயகர் செல்வம்: சாராய கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்.நேரு எம்.எல்.ஏ.; தமிழகத்தில் புதுச்சேரி கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக புகார் வருகிறது. புதுச்சேரியில் வெளிமாநிலத்தில் இருந்து எரிசாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன் மூலம் தயாரிக்கும் கள்ளச்சாராயம் குடித்து மரணம் ஏற்படுகிறது.சபாநாயகர் செல்வம்: தவறான தகவலை சபையில் தெரிவிக்க கூடாது.அங்காளன் எம்.எல்.ஏ.; புதுச்சேரி சாராயம் குடித்து 6 பேர் முண்டியப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எரிசாராயத்தில் தண்ணீர் கலந்து விற்கின்றனர்.சபாநாயகர் செல்வம்: கள்ளச்சாராய விவகாரத்தில் புதுச்சேரி மீது பழிபோட தமிழக அரசு முயற்சித்தது. அதை நாம் முறியடித்து விட்டோம்.முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி அரசின் சாராய ஆலை மூலம் சாராயம் வழங்கப்படுகிறது. சாராயம் தொடர்பான புகார்கள் வருவதால் சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்களில் அடைத்து ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி விற்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை