உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு புகுந்து நகை,பணம் கொள்ளை

வீடு புகுந்து நகை,பணம் கொள்ளை

திருபுவனை : வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புடைய நகை மற்றும் பணத்தைத் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன், மனைவி கருணாவதி 63; இவரது கணவர் இறந்த நிலையில், இவரது மகள் மலரின் மகனான, பிரதீப் 23; பராமரிப்பில் வசித்து வருகின்றார்.கருணாவதிக்கு கடந்த 5ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பேரன் பிரதீப் கடந்த 11ம் தேதி, பண்ருட்டியில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று நேற்று முன்தினம் 15ம் தேதி காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடன் கருணாவதிக்கு தகவல் தெரிவித்து,அவர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்து 6 தங்க கிராம் நகைகள், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.கருணாவதி புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை