மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
24 minutes ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
24 minutes ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
25 minutes ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
26 minutes ago
புதுச்சேரி : விஷவாயு தாக்கிய சம்பவத்தில், ஹைட்ரஜன் சல்பைடு வாயு எப்படி உருவானது என, இந்திய தொழில்நுட்பக் கழக சிவில் பொறியாளர் உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் கண்டறிந்து அதற்கான அறிக்கையை பொதுப்பணித்துறையில் சமர்ப்பித்தனர்.ரெட்டியார்பாளையம், புது நகர் 4வது குறுக்கு தெருவில், கடந்த 11ம் தேதி பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு, கழிவறை வழியாக வெளியேறியதில், 16 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.விஷவாயு கசிவு குறித்து ஆய்வு செய்ய தலைமை செயலர் சரத் சவுக்கான் ஆலோசனைப்படி, இந்திய தொழில்நுட்ப கழக சிவில் பொறியியல் துறை தலைவர் காஸ்மிக், நீரி அறிவியல் ஆய்வாளர் சிவக்குமார், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சரவணன் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வல்லுநர் பிரவீன்சிங் சரண் அடங்கிய குழுவினர் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதிகளை பார்வையிட்டனர்.பின், கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தனர். இரு நாட்கள் நடந்த ஆய்வில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி உட்பட பலர் உடனிருந்தனர்.தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் சிறப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர்.ஆய்வில், புதுநகர் கழிப்பறை குழாய் இணைப்புகளில் எஸ் மற்றும் பி வடிவ நீர் காப்பு (வாட்டர் சீல்) முறை இல்லாததும், முறையான ஆய்வு தொட்டிகள், வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது விஷவாயு பாதிப்புக்கு முதன்மை காரணம் என தெரியவந்தது. அதிகப்படியான வெப்பம் காரணமாக கழிவுநீர் குழாய்களில் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி இருப்பதும், அவை வாட்டர் சீல் இல்லாத இடங்களில் வழியாக வெளியேறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.ஆய்வு குழுவினர் தங்களின் ஆய்வு அறிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
24 minutes ago
24 minutes ago
25 minutes ago
26 minutes ago